செல்போன் பறிப்பு சம்பவத்தின்போது, தவறி விழுந்த பயணி உயிரிழந்தார்.

மீஞ்சூர் அருகே விரைவு ரயிலில் பயணியிடம் நடந்த செல்போன் பறிப்பு சம்பவத்தின்போது, தவறி விழுந்த பயணி உயிரிழந்தார்.

இது தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தீஸ்வரதாஸ்(44). இவர், கடந்த வாரம், வேலை தேடு வதற்காக, ஹவுராவில் இருந்து, சென்னைக்கு, கொரமண்டல் விரைவு ரயிலில் வந்து கொண்டிருந் தார்.

அந்த விரைவு ரயில், கடந்த 9-ம் தேதி மாலை, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ரயில் நிலையம் அருகே மிக மெதுவாக வந்து கொண்டிருந் தது.

அப்போது, படிக்கட்டு அருகே பயணம் செய்து கொண்டிருந்த சித்தீஸ்வரதாஸின் செல்போனை தண்டவாளத்தில் நின்று கொண்டி ருந்த 2 சிறுவர்கள் பெரிய கம்பால் தாக்கி பறித்தனர்.

இதனால், நிலை தடுமாறிய சித்தீஸ்வரதாஸ், ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே, அந்த சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தில் பலத்த காய மடைந்த சித்தீஸ்வரதாஸ் மீட்கப் பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுய நினைவு இல்லாத நிலையில் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஏற்கெனவே, செல் போன் பறிப்பு மற்றும் தாக்குதல் வழக்குப் பதிவு செய்த கொருக்குப் பேட்டை ரயில்வே போலீஸார், கடந்த 11-ம் தேதி, 13-ம் தேதி ஆகிய நாட்களில், நந்தியம்பாக்கம், பொன் னேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயதே ஆன இரு சிறுவர்களை கைது செய்த னர்.