தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு

 

 

 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்

கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் முதல் ஐந்து நாட்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை செய்துகொள்ள மக்கள் முன்வரவேண்டும்

நோய் அறிகுறிகள் தென்பட்டு முதல் 5 நாட்களுக்குள் சோதனைகள் செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் 100% குணப்படுத்தி விடலாம்

நோய் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு கடைசி ஐந்து நாட்களில் வந்தால் இறப்பு விகிதம் அதிகமாகிறது

கேரளாவில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் தான் கரீனா குறைந்துள்ளது
அதேபோல் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்

பேரிடர் காலத்திலும் குடிமராமத்து பணிகள் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்

மேலும் ஸ்டாலின் வெறும் அறிக்கை மட்டும் வெளியிடாமல் பேரிடர் காலத்தில் அரசுடன் தோள் கொடுக்க வேண்டும் அதைத்தான் மக்களும் விரும்புவார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்