பெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல்

பெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல்

பெ.நா.பாளையம், ஜன.1:

கோவையை அடுத்த ஆனைகட்டியில் டாஸ்மாக் மதுக் கடைக்கு குடிமகன்களை ஏற்றி வந்த கேரளா ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனைகட்டி பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் அட்டப்பாடியில் இருந்து ஆட்களை ஏற்றி வந்த மூன்று ஆட்டோக்களை சோதனை செய்தனர். அப்போது அவை தமிழ்நாட்டிற்குள் ஓட்டுவதற்கு அனுமதி பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆனைகட்டி ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு வருவதும், மீண்டும் அட்டப்பாடிக்கு கொண்டு சென்று விடுவதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 3 ஆட்டோக்களையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிவகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.