வெளி நாடுகளில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றுஅப்துல் ரஹீம் கோரிக்கை

 

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சார்ந்த சார்ந்தவர்களை தாயகம் அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில பொருளாளர் அப்துல் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மண்ணடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் இணைய வழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெளி நாடுகளில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என மாநில/ மத்திய அரசை கோரிக்கை விடும்
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறினார்.

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தற்போது பொருளை பரவி வரும் இந்த சூழலில் அகதிகளைப் போல வாழ்ந்து வருவதாகவும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்த அவர் உடனடியாக அவர்களை தமிழக அரசு தாயகம் அழைத்துவர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக தமிழகம் முழுவதும் 1 கோடி ரூபாய்க்கும் மேலாக நிவாரண உதவிகளை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.