ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயின் அஷ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா

 

 

சென்னை ஜூலை11

சென்னை நெசப்பாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயின் அஷ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது…

முன்னதாக மாரியம்மனுக்கு 30 ற்கும் மேற்பட்ட வேதாச்சாரியார்களால் கணபதி ஹோமம், கோபுஜை உள்ளிட்ட நான்கு கால யாக புஜை செய்யப்பட்டு,கலச நீர் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு கும்மாபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது…

அதன் பின்னர் கும்பாபிஷேகத்தை காண கூடியிருந்த 5000 ற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது..

மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் விருகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்…

பின்னர் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கும்பாபிஷேகத்த காண 1000க்கனக்கான பக்தர்கள் கூடியிருந்தால் அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்…