மண்டல அலுவலகம் 15-ல் மக்கள் குறைதீர் முகாம்

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 15-ல் மக்கள் குறைதீர் முகாம் இன்று (10/09/2018) நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும்,பொதுநலச் சங்கங்களும் பங்கேற்றனர்.சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 15-க்கு உட்பட்ட அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள்,குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் துறை, வருவாய்த் துறை,மின்சார வாரியம்,நெடுஞ்சாலை துறை,குடிசைமாற்று வாரியம் மற்றும் வீட்டுவசதி துறை, பொதுப்பணித்துறை,உணவு வழங்கல் துறை, சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறை,சென்னை மாநகராட்சி தெரு மின்விளக்கு துறை,சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை ஆகிய துறைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றார்கள்.பெறப்பட்ட மனுக்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மனுதார்களிடத்தில் 15 நாட்களுக்குள் உள்ளாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.வருகின்ற வடகிழக்கு பருவமழைக்கு முன் செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் திட்டங்கள் துரிதமாக நடைப்பெற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. உடன் திரு.இராஜேந்திரன் Ex MP. திரு.கே.பி.கந்தன் Ex M.L.A. திரு.மா.தனபால் திரு.M.C.முனுசாமி திரு.லியோ சுந்தரம் திரு.T.C.கோவிந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *