நீதிமன்றம் வழக்கு விரைவில் முடிக்க அதிரடி நடவடிக்கை
#ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த #நீதிமன்ற வளாகத்தில் 2 கூடுதல் #நீதிமன்றங்கள் திறப்பு…வழக்குகள் விரைவில் முடிக்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட நீதிபதி #முத்து சாரதா பேச்சு…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம்,மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்,மாவட்ட மகிளா நீதிமன்றம் என மொத்தம் இதுவரை 9 நீதிமன்றங்கள் இருந்தன.இந்நிலையில் கூடுதலாக இன்று மாவட்ட நீதி மன்றம் மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்ற என 2 கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா திறந்து வைத்தார்.இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றதில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 2 கூடுதல் நீதிமன்றங்கள் திறக்கப்ட்டுள்ளதாகவும்,இதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட நீதிபதி முத்து சாரதா தெரிவித்தார்.
(விருதுநகர் நிருபர் விக்னேஷ் ராஜா)