மகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த நாள் விழா
மகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமார் இந்தியாவிலேயே முதன் முறையாக அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை தலைப்பில் 150 இடங்களில் காட்சிப்படுத்தி காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகளை எடுத்துரைத்து வருகிறார். பீமநகர் கிளை நூலகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி காந்திய சிந்தனைகளை எடுத்துரைத்தார். நூலகர் அப்துல் முனாப் தலைமையில் நூலக வாசகர்களுக்கு மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார்