மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் மருத்துவமனைக்கு வர மறுத்த தாய் …

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அன்சலி பாத்திமா என்ற பெண்மணி 9 மாத கர்ப்பணியாக உள்ளார். இவருக்கு நேற்று இரவு பிரசவ வலி வந்துள்ளது உடனை அவரது கணவர் முகமது தாஜூதின் என்பவர் ஆயர்வேத மருத்துவ முறைப்படி ஒரு புத்தகத்தை பார்த்து அவரது வீட்டில் வைத்து நள்ளிரவில் மனைவி அன்சலி பாத்திமாக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர்க்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது மேலும் அருகில் உள்ள வீட்டார்கள் மருத்துவ மனைக்கு தகவல் கொடுத்துள்ளனர் .

பின்னர் காலை சுகாதார இணை இயக்குநர் ராம் கனேஷ் மற்றும் டாக்டர் குழுவினர் சென்று மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர் ஆனால் தாயும் அவரது கணவரும் வரமறுத்துள்ளனர், தாயை பரிசோதனை செய்த டாக்டர் தாயின் உடல் நிலை மோசமாக உள்ளது என கூறி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என அறிவுறை கூறியுள்ளார் ஆனால் தாயும் கணவரும் வர மறுத்ததால் உடனடியாக காவல் துறையினரை வரவழைக்கப்பட்டு பின்னர் 108 முலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மணைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தாய்க்கும் குழந்தைக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணவரிடம் சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரே பிரசவம் பார்த்தது அப்பகுதியில் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *