திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா
திருப்பதி பிரமோற்சவத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளினார் ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 3ஆம் நாளான நேற்று இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் நான்குமாட வீதிகளில் வீதியுலா வந்த மலையப்பசுவாமியை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசித்தனர்.
யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வர பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.