உலகிலேயே முதன்முறையாக, கிட்டத்தட்ட முழுமையாக பார்வைத்திறனற்ற நோயாளிகளுக்கு மீண்டும் பார்வை

உலகிலேயே முதன்முறையாக, கிட்டத்தட்ட முழுமையாக பார்வைத்திறனற்ற நோயாளிகளுக்கு மீண்டும் பார்வைத்திறனை வழங்குவதற்கான அறுவைசிகிச்சையில், உயர் பயன்கள் தருவதற்கான புதிய ஊசித்துவார பியுபிலோபிளாஸ்டி உத்தியை டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை அறிமுகம் செய்கிறது

யுரோப்பியன் சொசைட்டி ஆஃப் கேட்டராக்ட் அன்டு ரிஃப்ராக்டிவ் சர்ஜன்ஸ் கூட்டத்தில் பேராசிரியர் அமர் அகர்வால் அவர்களால் உயர் உருப்பிறழ்ச்சிக்கு நேர்வுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சிகிச்சை உத்தி

சென்னை, 2018, அக்டோபர் 4 : சென்னை, அகர்வால் கண் மருத்துவமனை, உயர் உருப்பிறழ்ச்சி நேர்வுகளுக்கு உலகிலேயே முதன்முறையாக ஒரு புதிய தொழில் உத்தியுடன் சிகிச்சையை மேற்கொண்டதாக இன்று அறிவித்திருக்கிறது. ‘ஊசித்துளை கண்பார்வை அறுவைசிகிச்சை’ (Pinhole Pupilloplasty) எனப்படும் இந்த புதிய உத்தி அறுவைசிகிச்சையானது, பயன்படுத்த மிகவும் எளியது; மிகவும் செலவு குறைந்தது மற்றும் உயர் விளைபயன்கள் கொடுக்கக்கூடியது. இந்த புதிய புதிய சிகிச்சை உத்தியில் கிட்டத்தட்ட பார்வையற்ற நோயாளிகள் மீண்டும் கண்பார்வை பெறுகின்றனர். டாக்டர். அகர்வால் குழும கண் மருத்துவமனைகள் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால் அவர்கள், இந்தியாவில் நோயாளிகளுக்கு இந்த புதிய உத்தியின்கீழ் வெற்றிகரமாக சிகிச்சையளித்த பிறகு, இதனை யுரோப்பியன் சொசைட்டி ஆஃப் கேட்ராக்ட் அன்டு ரிஃப்ராக்டிவ் சர்ஜன்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். சிகிச்சையில் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு இந்த புதிய உத்தியை பயன்படுத்துமாறு உலக கண் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

கண்ணின் வெளிப்படையாகத் தெரியும் முன்புறப் பகுதியான கருவிழிப்படலம் பார்வையை குவியப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறது என்றும், காயங்கள், குண்டு/பட்டாசு வெடிப்புகளில் பாதிப்படைதல், கண் உறுப்பு மாற்றுக்குப் பிறகு அல்லது அறுவைசிகிச்சைக்குப் பிறகு அல்லது கூம்புக்கருவி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கருவிழிப்படலம் சிதைவடையக்கூடும். இதுபோன்று பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஏறக்குறைய 20 டயாப்டர்ஸ் அளவுக்கு அவர்கள் கண்களில் உயர் உருப்பிறழ்ச்சி காணப்படும்.

உருப்பிறழ்ச்சி என்பது ஒரு திசையில் ஒளி விலகும் பார்வைத்திறனாகும். இது விழித்திரையில் ஒருமுகப்படுத்துதலிலிருந்து தடுக்கிறது. இதுவே கருவிழி வடுவிற்கு அல்லது அறுவைசிகிச்சையால் ஏற்படும் மங்கிய பார்வைக்கு பொது காரணமாகும். ஒரு இயல்பான கண் 3-4 டயாப்டர் உருப்பிறழ்ச்சியை தாங்கிக்கொள்ளும். 20 டயாப்டர் அளவு உருப்பிறழ்ச்சி ஒரு நோயாளிக்கு இருக்குமானால் அவரால் தெளிவான பார்வைத்திறனை கொண்டிருக்க இயலாது.

உலகிலேயே முதன்முறையாக, டாக்டர். அகர்வால் மருத்துவமனை ‘ஊசித்துளை பியுபிலோபிளாஸ்டி அறுவைசிகிச்சை’ எனப்படும் ஒரு புதிய சிகிச்சை உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இடைத்திரையான கண்பார்வையை 1.5 மிமீ அல்லது அதற்கு குறைவாக ஆக்கும் தொழில்நுட்பமாகும். 20 d உருப்பிறழ்வு இருந்தாலும்கூட வெளிப்புற ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள் புக முடியாது என்பதால் பொருட்கள் தெளிவாக புலப்படுகின்றன. 1.5 மிமீ கண்பார்வை வழியாக செல்லக்கூடிய மத்தியக்கதிர்கள் மட்டுமே கண்ணுக்குள் செல்லும். எனவே, ஊசித்துளை சிகிச்சை உத்தியினால், விழித்திரையில் கதிர்களின் குவியத்தின் தரமும் மற்றும் ஆழமும் மேம்படுகிறது.

டாக்டர். அகர்வால் குழும கண் மருத்துவமனைகள் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், MS, FRCS, FRCOphth, அவர்கள் கூறுகையில், “ஊசித்துளை பியுபிலோபிளாஸ்டி அறுவைசிகிச்சை” என்பது உயர் உருப்பிறழ்வு உள்ள நோயாளிகளை குணப்படுத்துவதற்குரிய புதிய முறையாகும். சிதைவடைந்த கருவிழிப்படலத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. ஆனால் கண்மணியில் 1.5 மிமீ அளவு ஊசித்துளையாக ஆக்க நாங்கள் முடிவு செய்தோம். இது ஒரு வழி நான்கு – வீச்சு கண்பார்வை அறுவைசிகிச்சை தொழில்நுட்பம் கொண்டு செய்யப்பட்டது. 6/60 அல்லது அதற்கு குறைவாக கண்பார்வை உள்ள நோயாளிகள் 6/12 கண்பார்வை அல்லது அடுத்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு அதைவிட நல்ல பார்வை கிடைக்கப்பெறுவார்கள். 2 டயோப்டர் உருப்பிறழ்ச்சி உள்ள நோயாளிகள், இந்த ஊசித்துளை பியுபிலோபிளாஸ்டி அறுவைசிகிச்சை மூலம் இயல்பான கண் பார்வை பெறுவார்கள். எந்த நடைமுறை தொழில்நுட்பத்தை வேண்டுமென்றால் பயன்படுத்தலாம். ஆனால் கோட்பாடு ஒன்றே தான். அதாவது கண்ணை ஒரு ஊசித்துளையாக மாற்றுதல். ஆகவேதான், ‘பின்ஹோல் பியுப்பிலோபிளாஸ்டி’ அல்லது PPP சிகிச்சை உத்தி என இது அழைக்கப்படுகிறது,” என்றார்.

இந்த நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், கருவிழி காய வடுவுக்குப் பிறகு பார்வை இழப்பு அல்லது கருவிழி உறுப்புமாற்று சிகிச்சைக்குப் பிறகு மங்கிய பார்வையை சீர்செய்வதற்கு மற்றபடி மேற்கொள்ளப்படும் சிக்கலான நடைமுறைகளை நோயாளி தவிர்க்க முடியும். இந்த ‘பின்ஹோல் பியுப்பிலோபிளாஸ்டி’ நடைமுறை, ஒட்டுமொத்த அறுவைசிகிச்சை செலவையும் மற்றும் இரண்டாவது அறுவைசிகிச்சை காரணத்தால் ஏற்படும் சிக்கல்களையும் குறைக்கிறது. மேலும் ஊசித்துளை அளவுக்கு கண்மணியைப் பெறுவதற்குரிய அறுவைசிகிச்சை நடைமுறையைப் பயன்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இச்சிகிச்சை உத்தியின் மூலம் கிடைக்கும் தெளிவான பார்வைத்தரம், நோயாளிகளை எப்போதும் மனநிறைவாக வைத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *