ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து டாடா ஸ்கை தமிழ் சினிமா

இந்தியாவின் முன்னணி நிகழ்ச்சி விநியோக தளமான டாடா ஸ்கை தெற்கு பிராந்திய நிகழ்ச்சி விநியோக வலைப்பணியை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ‘டாடா ஸ்கை தமிழ் சினிமா’ என்னும் புதிய முனைவை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் கோலிவுட்டின் பிரம்மாண்ட மற்றும் மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் இடையிடையே விளம்பரங்கள் இல்லாமல் உயரிய தரத்தில் ஒளிபரப்பாகும். தமிழின் முன்னணி சேனல்களுள் ஒன்றான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து டாடா ஸ்கை தமிழ் சினிமா மகத்தான வெற்றி பெற்ற மற்றும் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் உள்பட 100+ தலைப்புகளில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் இடையிடையே விளம்பரம் இல்லாமல் தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகாத புத்தம் புதிய கோலிவுட் திரைப்படங்களையும் நீங்கள் பார்த்து மகிழலாம்.

சென்னையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷிணி மற்றும் டாடா ஸ்கை முதன்மை கண்டெண்ட் அதிகாரி அருண் உன்னி ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாதமும் 2018இல் வெளியான பிரத்யேக திரைப்பட பிரிமியர்களுடன் குடும்பக் கதை, ஆக்ஷன், க்ரைம், திரில்லர் என ஆண்டுக்கு 100 திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். சந்தாதாரர்கள் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, ஆக்ஷன் திரில்லர் தீரன் அதிகாரம் ஒன்று, பாகுபலி 2 மற்றும் ஜிகிர்தண்டா, பயணம், தெகிடி, துப்பாக்கி, விஸ்வரூபம் ஆகியவற்றையும் கண்டு களிக்கலாம். விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ இந்த மாதத்துக்கான பிரிமியர் திரைப்படமாக ஒளிபரப்பாகும்.

நிகழ்ச்சியில் பங்கேற்று டாடா ஸ்கை முதன்மை கண்டெண்ட் அதிகாரி அருண் உன்னி கூறுகையில் ‘தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்வையாளர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் என்பதுடன் திரைப்படங்கள் மீதும் ஆர்வம் மிக்கவர்கள். தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழக எல்லைகள் தாண்டி நாடு முழுவதும் ரசிகர்கள் இருப்பதால், இந்தக் கலவையே ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து டாடா ஸ்கை தமிழ் சினிமாவை அறிமுகப்படுத்த ஊக்கமளித்தது. விளம்பரங்கள் ஏதுமின்றி தடையின்றி வீட்டில் இருந்தபடியே திரைப்படங்களைக் கண்டு மகிழும் அனுபவத்தை வழங்கும் முனைவே ஆகும்’ என்றார்.

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அறிமுக விழாவில் பேசுகையில் ‘இன்றைய திரைப்படங்கள் ஒருவரின் அறிவு விரிவாக்கமாகவும், வாழ்க்கையின் பொழுதுபோக்கு அம்சமாகவும் விளங்குகின்றன. மேலும் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க மொழி ஒரு தடையே இல்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்கள் இனி மிகச் சிறந்த தமிழ்ப் படங்களைப் பார்த்துக் குதூகலிக்க வழிவகுக்கும் இந்த எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு அடித்தளம் அமைத்த டாடா ஸ்கை தமிழ் சினிமாவுக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்றார்.

59 தமிழ் சேனல்களுடன், டாடா ஸ்கை தமிழ் சினிமா இனி டாடா ஸ்கைக்காகப் பொது மக்களிடையே பிரபலமாகி வரும் பிராந்திய திரைப்படங்களையும், இடையிடையே விளம்பரங்கள் ஏதுமின்றி மிக உயரிய தரத்தில் ஒளிபரப்ப உள்ளது. இந்த முனைவின் ஓர் அங்கமாக டாடா ஸ்கை பங்களா சினிமா, டாடா ஸ்கை பஞ்சாப் தே ரங்க், டாட ஸ்கை மராத்தி, டாடா ஸ்கை கிட்ஸ் சினிமா மற்றும் சமீபமாக டாடா ஸ்கை தெலுகு சினிமா ஆகியவை அறிமுகமாகி உள்ளன.

அனைத்து சந்தாதாரர்களுக்கும் இப்போது டாடா ஸ்கை தமிழ் சினிமா # 1502 (எஸ்டி) மாதம் ரூ 45/- குறைந்தபட்சக் கட்டணத்தில் கிடைக்கும்.

டாடா ஸ்கை
டாடா ஸ்கை லிமிடெட் (டாடா ஸ்கை) டாடா சன்ஸ் மற்றும் 21 செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முனைவாகும். 2001 நிறுவப்பட்டு 2006இல் தனது சேவைகளைத் தொடங்கிய டாடா ஸ்கை நிறுவனம் பே டிவி மற்றும் ஓடிடி சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி நிகழ்ச்சி விநியோக தளமாகும். எந்த பட்ஜெட்டுக்கும், எந்த ஸ்க்ரீனுக்கும், எங்கும் எப்பொதும் உலகின் மிகச் சிறந்த நிகழ்ச்சிகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு பொருள்களையும், சேவைகளையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது டாடா ஸ்கைதான். அந்த வகையில் சந்தாதாரர்களின் பார்க்கும் அனுபவத்துக்கு நாட்டிலேயே மறுவிளக்கம் அளித்ததுடன், ஹெச்டி செட் டாப் பாக்ஸ் பிரிவில் கணிசமான சந்தைப் பங்கைக் கொண்டிருப்பதும் டாடா ஸ்கைதான். அனைத்துப் பிரிவு மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் புதிய சேனல்கல் மற்றும் தளச் சேவைகள் மூலம் வித்யாசமான நிகழ்ச்சிகளைப் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 2 லட்சம் நகரங்களில் 18 மில்லியன் இணைப்புகளுடன் டாடா ஸ்கை பரந்து விரிந்துள்ளது.

டாடா ஸ்கை குறித்த மேலும் விவரங்களுக்கு : www.tatasky.com&watch.tatasky.com டாடா ஸ்கை தொடர்புகளுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *