எலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு

அப்பல்லோ காஸ்மிக் 2018 – எலும்பியல் துறை மற்றும் விளையாட்டு மருத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு

எலும்பியல் துறை (Orthopaedics) மற்றும் விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) தொடர்பான ’அப்பல்லோ காஸ்மிக்’ 2018 (APOLLO COSMIC 2018) சர்வதேச மாநாட்டின் 2-வது மாநாட்டுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஆர்தோபீடிக்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கவுள்ள இந்த 2 நாள் மாநாட்டில், எலும்பியல் மருத்துவத்தில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், அதில் மேலும் கொண்டுவர வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.
இந்த 2 நாள் மாநாட்டில் 400-க்கும் அதிகமான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, துபாய் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 5 சர்வதேச விரிவுரையாளர்களும் பங்கேற்க உள்ளனர். உலகெங்கிலும் இருந்து புகழ்பெற்ற எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், விளையாட்டு மற்றும் காயங்களுக்கான அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், வாத சிகிச்சை நிபுணர்கள் இதில் பங்கேற்று, முழங்கால் மூட்டுவலி, மூட்டு மற்றும் தோள்வலி போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கான சிகிச்சை தொடர்பான தங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் எடுத்துரைக்க உள்ளனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது, விவாதங்களில் பங்கேற்பது, கலந்தாய்வில் பங்கேற்பது என பல்வேறு செயல்களில் அவர்கள் ஈடுபட உள்ளனர்.
காஸ்மிக் 2018 சர்வதேச மாநாட்டுக்கு அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. எலும்பு சார்ந்த மருத்துவத்தில் உள்ள முக்கிய அம்சங்கள், இதன் சிகிச்சை தொடர்பான பல்வேறு புதிய வாய்ப்புகளைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். நாடெங்கிலும் உள்ள இத்துறை சார்ந்த மருத்துவர்களுக்கு பல புதிய விஷயங்களை தெரிந்துகொள்ளவும், உலகளாவிய நிபுணர்களின் அனுபவங்களைக் கேட்டு தெரிந்துகொள்ளவும், அமர்வுகள், மாதிரிகள் மற்றும் நேரடி நிகழ்வுகளில் இருந்து புதிய அனுபவங்களைப் பெறவும் இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும். இதில் பங்கேற்கும் மருத்துவர்கள் எலும்பியல் தொடர்பான சிகிச்சையில் நோயாளிகளின் பிரச்சினைகளைக் கண்டறியவும், எலும்புமூட்டு அறுவைச் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் கூடுதல் தன்னம்பிக்கை பெறும் வகையிலும், அவர்கள் கூடுதல் வெற்றிகள் மற்றும் வல்லுநர்தன்மையை பெறும் வகையிலும் இந்த மாநாட்டின் அமர்வுகள் இருக்கும்.

மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை (knee replacement) , ரோபோட்டிக் முறை மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை (Robotic Knee Replacement), ரிவிஷன் நீ ரீபிளேஸ்மெண்ட் (Revision Knee Replacement), அட்வான்ஸ்ட் ஆர்தோஸ்கோபிக் ஷோல்டர் சர்ஜரி (Advanced arthroscopic shoulder surgery), அட்வான்ஸ்ட் நீ கீஹோல் சர்ஜரி (Advanced Knee Keyhole surgery) போன்ற பல்வேறு அறுவைச் சிகிச்சைகளில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். உலகின் முன்னணி எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர்களான இங்கிலாந்தின் டாக்டர்.ஃபில் ஹிர்ஸ்ட் (Dr. Phil Hirst), ஆஸ்திரேலியாவின் டாக்டர்.ஜொனாதன் ஹெரால்ட் (Dr.Jonathan Herald), நெதர்லாந்தின் டாக்டர்.நானே கோர் (Dr.Nanne Kort), துபாயின் டாக்டர்.வில்லியம் முர்ரெல் ஜூனியர் (Dr. William Murrell JR), அமெரிக்காவின் டாக்டர். பிலிப் ஹில் (Dr.Philip Hill) ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். ‘அப்பல்லோ காஸ்மிக் 2018’ நிகழ்ச்சியின் அமைப்புக் குழு உறுப்பினர்களான மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர். மதன் மோகன் ரெட்டி (Dr. Madan Mohan Reddy, Sr.Consultant Orthopaedic surgeon), எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.குணால் படேல் (Dr. Kunal Patel) டாக்டர்.விஜய் ரெட்டி (Dr. Vijay Reddy), டாக்டர் அருண் கண்னன் ( Dr.Arun Kannan) ஆகியோரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *