காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டு கலை நிகழ்ச்சி
சென்னை காதுகேளாதோர் சங்கத்தின் 74ஆம் ஆண்டை முன்னிட்டு காதுகேளாத வாய்பேச இயலாத பள்ளி மாணவ மாணவிகளுக்கான 3வது தமிழக அளவிலான கலை விழா
சென்னை சாலிகிரா மத்தில் உள்ள கோல்டன் பாரடையஸ் திருமண மண்டபத்தில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் 5 மாவட்டங்களில் இருந்து சுமார்
10 பள்ளிகள் கலந்து கொண்டன.
மகிழுலா 2018 என்ற பெயரில் நடை பெற்ற இவ்விழா காதுகேளாத குழந்தைகளின் தனித்திறமை வௌிப்படுத்தும் நிகழ்வாகும்.
ரங்கோலி, ஓவியம், முக ஓவியம், மைம், நடனம், கிராப்ட், மெகந்தி என 10 விதமான போட்டிகள் நடபெற்றது. இதில் காதுகேளாத குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று அவர்களின் தனித்திற்மைகளை வெளிப்படுத்தினர்.