சந்திர பிரபா முத்தையா சொந்த செலவில் தூர் வாரும் பணியை மேற்கொண்டு உடனே ஆய்வு செய்தார்.பொது மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கண்மாய் நீர்வரத்து வழி பாதைகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா ஊதியத் தொகை மற்றும் சொந்த செலவில் தூர் வாரும் பணியை மேற்கொண்டு ஆய்வு.
ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்க்கு தொடர்ச்சி மலை பகுதியில் சில தினங்களா தொடர்ந்து மழை பொழிந்து அணைகள் கண்மாய்கள் நிரம்பியது. இதனால் சிறிது காலம் நகர் பகுதியில்தண்ணீர் தட்டுபாடு இருக்காது எனவும் விவசாயம் செலிக்கும் என பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் மம்சாபுரம் அருகே வாழங்குளம் கண்மாய் பகுதியில் இருந்து விவசாயாத்திற்கு நீர் வரத்து பாதைகளில் செடி கொடிகள் வளர்ந்து நீர் வரத்து பாதைகளை அடைத்துள்ளது எனவும் அவற்றை தூர் வாரினால்தான் தங்கலால் விவசாய பணிகளை மேற்க்கொள்ள முடியும் என்று சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா விடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா அவருடைய ஊதியத் தொகை மற்றும் சொந்த செலவில் நீர்வரத்து பாதைகளை தூர் வாரும் பணியை மேற்க் கொண்டு ஆய்வு செய்தார். தூர் வாரும் பணிகள் நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினரை விவசாயிகள் பொது மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.
செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.