புதிய சோதனைச் சாவடி காவல் கண்காணிப்பாளர் ராஜ ராஜன் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக புதிய சோதனைச் சாவடி புறநகர் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி விளக்கு அருகில் விருதுநகர் உட்கோட்டம் எல்லை ஆரம்பமாகிறது.இப்பகுதியில் வாகனங்களில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும், வருடா வருடம் வரும் பல்வேறு அமைப்பு தலைவர்களின் குரு ஜெயந்தி விழாவிற்க்கு செல்ல கூடிய வாகனங்களை சோதனை செய்வதற்காகவும் புதிய சோதனைச் சாவடி,புற நகர் காவல் நிலையம் கட்டப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜ ராஜன் திறந்து வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜா, மகளிர் காவல் ஆய்வாளர் மலர் விழி மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன்..
பசும்பொன் செல்வதற்கு தேவர் குருபூஜை சம்பந்தமாக வரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. வரும் 28, 29, 30 ஆகிய நாட்களில் விருதுநகர், தென்காசி, சங்கரன்கோவில், ஆகிய பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வாகனங்களும், அரசு சார்பாக 64 பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் செல்ல உள்ளனர்.
மாவாட்டம் முமுவதும் குரு ஜெயந்தியை முன்னிட்டு 300 க்கும் மேற்ப்பட பல்வேறு விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு 3000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அருப்புக்கோட்டை வழியாக பசும்பொன் செல்லக் கூடிய விஜபி, விவிஜபிகளை மிகுந்த பாதுகாப்புடன் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் முழுவதும் எந்த ஒரு அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்கு விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.