பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….
ஸ்ரீவில்லிபுத்தூரில் 111-வது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா முத்துராமலிங்க தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,அவருக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இதில் கழக நிர்வாகிகள், பிரமுகர்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
செய்தியாளர் R. விக்னேஷ் ராஜா