காதல் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் என்ன காரணம் ?
விஷ்ணு விஷால், தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாக இன்று அறிவித்திருப்பது திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து வந்த விஷ்ணு விஷால், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இன்று தனது பி.ஆர்.ஒர் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஷ்ணு விஷால், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து ஒரு ஆண்டாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்துவிட்டதாக, தெரிவித்துள்ளார்.