ப்ரீதி 40 ஆவது ஆண்டு விழா

ப்ரீதி 40 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய தொழிற்சாலை தொடக்கம் சென்னை: 2018 நவம்பர் 16: ப்ரீதி கிச்சன் அப்ளையன் சஸ் தனது இந்தியாவில் தயாரிமுனைவின் அடிப்படையில் மிக முக்கியமான மைல்கல் சாதனையாக சென்னை அருகே அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தொழிற்சாலையின் தொடக்க விழாவைக் இன்று கோலாகலமாகக் கொண்டாடியது. இது கடந்த நாற்பது ஆண்டு கால ப்ரீதியின் ஆளுமையைக் குறிப்பதாகும். 70,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ள மிக்ஸர் – க்ரைண்டர் தயாரிப்பு மற்றும் பாகங்களை ஒருங்கிணைக்கும் அலகை பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் ராயல் ஃபிலிப்ஸ் பிரபலங்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று ராயல் ஃபிலிப்ஸ், தனிநபர் சுகாதாரம், முதன்மை வணிகத் தலைவர் ராய் ஜேகம்ப்ஸ் பேசுகையில் எங்கள் தயாரிப்பு அலகு லீன் சான்றிதழ் பெற்றதுடன், அனைத்துப் பொருள்களும் ஆர் ஒஹெச்எஸ் இணக்கமானவை என்பது பெருமையான விஷயம். திறனை அதிகரிக்கவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரப் பொருள்களை வழங்கவும், இத்தொழிற்சாலையில் கோபோட்கள் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எதிர்காலத்தில் இந்த இடத்தை மிக்ஸர் -கிரைண்டர் தயாரிப்புகளுக்கான உலகளாவிய மையமாகத் தரம் உயர்த்தத் திட்டமிட்டு வரும் நிலையில், எங்களது வளர்ச்சித் திட்டங்களுக்கு இது சரியாகப் பொருந்தும், தொழிற்துறையில் எங்களது முன்னணி இடத்தைத்தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இப்புதிய தொழிற்சாலை உதவுமென உறுதியாக நம்புகிறோம் என்றார். இத்தனை ஆண்டுகளாக பிராண்டின் வளர்ச்சி குறித்து ப்ரீதி கிச்சன் அப்ளையன் சஸ் மேலாண் இயக்குனர் ஸ்ரீநிவாசன் சுப்பிரமணியம் கூறுகையில் தயாரிப்பு வகைகளில் பிறவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை காரணமாக எங்களது கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சிக் குழுவை வலுப்படுத்தி எரிவாயு அடுப்புகள் பிரிவில் முதலீடு செய்தோம். தற்போது இது இரண்டாவது முக்கியப் பிரிவான உருவெடுத்ததுடன், மிகக் குறைந்த மூன்றாண்டு காலத்தில் கணிசமான பங்களிப்பையும் வழங்கும் நிலையையும் எட்டியுள்ளது. விற்பனை வலையமைவு விரிவடைந்ததால், சேவை வலையமைவும் விரிவடைந்ததுள்ளது. இன்றக் கு எங்களது பிராண்டின் விரிவான வலையமைவில் நாடு முழுவதும் 10000 + முகவர்கள், 100 + விநியோகஸ்தர்கள், 96 பழுது பார்க்கும் சேவை மையங்கள் உள்ளன என்று பெருமை படக் கூறுகிளோம்” எனறார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *