கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 46 ஆக உயர்ந்துள்ளது
கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 46 ஆக உயர்ந்துள்ளது. 1.28 லட்சம் மரங்கள், 30 ஆயிரம் மின் கம்பங்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில், தொற்று நோய் பரவலை தடுக்க, 203 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.