தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 10 வது மாநில மாநாடு டிசம்பர் 29 ஆம் தேதி
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 10 வது மாநில மாநாடு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஓசூரில் வைத்து மிக எழுச்சி மிகு மாநாடாக நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள உள்ள இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்,அரசு உயரதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ள நிலையில் இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு பாலகிருஷ்ணன் ரெட்டி பங்கேற்று தலைமையுரையாற்ற அழைப்பு விடுக்கும் வகையில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க .குமார் அவர்கள் மற்றும் ஓசூர் மாவட்ட நிர்வாகி RM வேலு சங்கத்தின் மேலாளரும் ஊடக குரல் நாளிதழ் நிருபருமான ராஜேஷ் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர் அவர்களே நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர். அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி நடைபெற உள்ள இந்த பத்திரிகையாளர்கள் மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மாநாட்டில் கண்டிப்பாக பங்கேற்ப்பதாக தெரிவித்தார். அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி அவர்களுக்கு மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்