பக்கிங்காம் கால்வாய் அடையார் ,கூவம் ஆறுகளை இணைக்கும் சிறந்த ஏற்பாடு
பக்கிங்காம் கால்வாய் அடையார் ,கூவம் ஆறுகளை இணைக்கும் சிறந்த ஏற்பாடு.ஆனால் கால்வாய் சாக்கடை நீராக ஓடுகிறது. அதற்கு காரணம் நாம்தான். எல்லா அசுத்தத்தையும் போடுகிறொம் அரசும் அதை சரி செய்ய முழுமையான முயற்சி எடுப்பதில்லை. மயிலை தொகுதியில் ஹாமில்டன் பாலத்திலிருந்து க்ரீன்வேஸ் சாலைவரை கால்வாய் சுமார் ஐந்து கிலோமீட்டர் உள்ளது. இதை சுத்தப்படுத்தும் பணியை முக்கிய இலக்காக வைத்துள்ளேன். முதல் கட்டமாக கல்வி வாரு தெரு ஒட்டி செல்லும் கால்வாய் சுற்றுப்புறம் அழகு படுத்தும் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணயர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்கள். கட்டட வல்லுனர் திருமதி கவிதா திட்டத்தை விளக்கினார்கள். செலவு சுமார் ரூபாய் நான்கு கோடி ஆகும். இன்னும் பதினைந்து நாட்களில் திட்டம் வரையப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பப்படும்.. பொது நிறுவனங்களின் பொது நலம் காக்கும் நிதியிலிருந்து உதவி பெறலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.