திப்புசுல்தான் அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் வாகனப் பேரணி

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது தேச துரோக வழக்கு பதிய கோரி இஸ்லாமிய சமூகத்தினர் 200க்கும் மேற்பட்டோர் பேரணி…
முகமது நபிகள் நாயகம் அவர்களை முகநூலில் இழிவாகவும் அவரது சமுதாயத்தை இழிவுபடுத்தும் தொடர்ந்து ஃபேஸ்புக் எனும் முகநூலில் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் என்பவர் தொடர்ந்து அவதூறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார் எனவே அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதன்படி இன்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த திப்புசுல்தான் அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் வாகனப் பேரணியாக சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊர்வலமாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வந்தனர் அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர் இதனால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது அங்கு வந்த காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை எடுத்து ஏற்று ஐந்து நபர்களை மட்டும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கரிடம் புகார் மனுவை அளிக்க அனுமதித்தனர் இதனால் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *