7 லாரிகளில் ரூ 31 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் செவ்வாய் இரவு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சி தலைவர் ரோகிணி கொடியசைத்து
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைத்தார்
7 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
மாவட்ட ஆட்சி தலைவர் ரோகிணி அனுப்பி வைத்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் ,
தஞ்சாவூர் .
புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு சேலத்தில் இருந்து
7 லாரிகளில் ரூ 31 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் செவ்வாய் இரவு அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சி தலைவர் ரோகிணி கொடியசைத்து
லாரிகளை அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. புயல் பாதித்த பகுதிகளில் பணியாற்ற மின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டி ருக்கிறார்கள் .
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவளிடம் வேறு என்ன பொருட்கள் தேவை என கேட்டு அந்த பொருட்களையும் அனுப்பி வைத்து வருகிறோம்.
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள்
நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள நிவாரண மையத்தில் கொண்டுவந்து வழங்கலாம் .
இவ்வாறு கூறினர்.