மாநில மக்களின் மனதில் ஆழமாய் பதிந்த யு-டியூப்

மாநில மக்களின் மனதில் ஆழமாய் பதிந்த யு-டியூப்

யு-டியூப்பில் 40-க்கும் மேற்பட்ட சேனல்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. இதேபோன்று, 570-க்கும் அதிகமான சேனல்கள் 1 லட்சம் சந்தாதாரர்களை எட்டி மைல்கல்லைத் தொட்டுள்ளது. கிராம உணவுகள் மற்றும் தமிழ் பாப் ஆகிய அம்சங்கள் இந்த ஆண்டு சந்தாதாரர்களை மிகவும் கவர்ந்து பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை, டிசம்பர் 10, 2018: கடந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த கலைப் படைப்பாளர்களிடம் இருந்து யு-டியூப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஓராண்டு முடிந்துள்ள நிலையில் அந்த தினத்தை தமிழ் தினமாக யு-டியூப் இன்று கொண்டாடுகிறது. இந்திய உள்நாட்டு மொழிகளுக்கும், அதன் உள்அடக்கத்தையும் அங்கீகரிப்பதற்கான மிகப்பெரிய தேவை இருக்கிறது. தமிழகத்தில் கலைப்படைப்பாளர்களின் திறனும், அவர்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக, யு-டியூப்பில் உள்ள 44 தமிழ் சேனல்கள் 1 மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், 570 சேனல்கள் 1 லட்சம் சந்தாதாரர்களைக் கடந்து மிகப்பெரிய மைல்கல் சாதனையைப் படைத்து வருகிறது.
இந்த ஆண்டில் யு-டியூப் செய்த பல்வேறு சாதனை நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கலாம். பல ட்ரெண்டிங் நிகழ்வுகள் சென்னை நகரத்தை மையப்படுத்தியே நிகழ்ந்துள்ளன. வில்லேஜ் புட் பேக்டரி எனப்படும் கிராமத்து சமையல் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அக்ஷய் குமார் நடித்த 2.0 பட ட்ரைய்லர் வரை பல்வேறு நிகழ்வுகள் ட்ரெண்டிங் ஆகி உள்ளன.
மேலும், தனிபர் கலைப்படைப்பாளர்களான சுபலட்சுமியின் 90-க்கும் மிகையான விடியோ கலைப்படைப்புகள் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டுள்ளன. சோனி மியூசிக்கின் மெட்ராஸ் கிக் டிராக் 48 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. பிரபுதேவாவின் குலேபகாவலியும் மிகச்சிறந்த வரவேற்பைக் கொண்டுள்ளது.
தமிழ் கலைப்படைப்பாளர்களின் செயல்பாடுகள், வெற்றி குறித்து, யு-டியூப் இந்தியாவின் உள்ளடக்க இயக்குநர் சத்ய ராகவன் கூறியதாவது:-
யு-டியூப்பில் விடியோ உள்ளடக்கத்தின் வளர்ச்சியானது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 245-க்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் யு-டியூப்பை பயன்படுத்துவதுடன்,
அவர்கள் தங்களது கலைப்படைப்புகளையும் பதிவேற்றம் செய்கிறார்கள். கடந்த 2014-ஆம் ஆண்டில் வெறும் 16 யு-டியூப் சேனல்கள் மட்டுமே 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தன. ஆனால், இன்று 300-க்கும் மேற்பட்ட சேனல்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் எங்களது பட்டியலில் இரண்டு சேனல்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் உள்ள உள்ளூர் மொழிகளைக் கொண்ட அதிக சேனல்கள் வந்தது இணைந்ததே காரணம். கற்பித்தல், உணவு, தொழில்நுட்பம், நகைச்சுவை, இசை போன்ற அம்சங்களைக் கொண்ட விடியோக்கள் கலைப்படைப்பாளர்களால் அதிகளவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கலைப்படைப்பாளர்களை வளர்த்தெடுக்கவும், மேம்படுத்தவும் நாங்கள் அதிகளவு முதலீடுகளை கடந்த சில ஆண்டுகளாகச் செய்துள்ளோம். இப்போது, யு-டியூப் ஸ்டார்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்று வருகிறார்கள் என்றார்.
தமிழ் கலைப்படைப்பாளர்கள் இந்த ஆண்டு பல உயரங்களை எட்டியுள்ளனர். இன்போபெல்ஸ் தமிழ், வில்லேஜ் புஃட் பேக்டரி, பிகைன்ட்உட்ஸ் டிவி, தமிழ் டெக் போன்றவை முன்னணி பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

Rank
Creator
Subscribers
Genre

1
இன்போபெல்ஸ்-தமிழ்
2.9 Million
Kids

2
வில்லேஜ் புட் பேக்டரி
2.2 Million
Food

3
பிளாக் ஷீப்
1.6 Million
Comedy

4
மெட்ராஸ் சென்ட்ரல்
1.5 Million
Web series

5
மைக் செட்
1.5 Million
Comedy

6
தமிழ்
1.4 Million
Tech

7
ஜம்ப் கட்ஸ்
1.3 Million
Web series

8
எரும சாணி
1.3 Million
Entertainment

9
தமிழ் டெக்
1 Million
Technology

10
ஸ்மெல் சேட்டை
78K
Entertainment

யு-டியூப் 2018-ஆம் ஆண்டில் மேலும் பல தேச, சர்வதேச டிரெண்டிங்களை வெளிப்படுத்தியது. மேலும், சீக்கி டிஎன்ஏ, வில்லேஜ் புட் பேக்டரி, பிளாக்ஷீப், செல்லமே செல்லம், விகடன் டிவி, சோனி மியூசிக் சவுத் ஆகிய கலைப்படைப்பாளர்கள் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
யு-டியூப் மேலும் பல கலைப்படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், புதிய படைப்பாளர்களை அறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை அளிக்கும் பணிகளை யு-டியூப் தொடர்ந்து மேற்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *