போலி நிருபர் 5 பேர் கைது
போலி நிருபர் உள்பட 5 பேர் கைது
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் அதிரடி
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் நிருபர் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டிய மூர்த்தி என்ற போலி நிருபர் மற்றும் உடனிருந்த குணா, பார்த்திபன், கார்த்திக், தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மூர்த்தி என்பவர் மீது கடந்த சில வருடங்களாக பல்வேறு புகார்கள் வாய்மொழியாக வந்த நிலையில் இன்று எழுத்துப்பூர்வமாக புகார் வந்ததையெடுத்து சிசிடிவி ஆதாரங்களுடன் கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்டத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இதுவரை 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.