காவல் சிறார் மன்றத்தின் மூலம் கிறிஸ்துமஸ் பெருவிழா

காவல் சிறார் மன்றத்தின் மூலம் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் – 2018

பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் (காவல் – சிறார் மன்றத்தின் ) மூலமாக கிருஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார்கள். இதில் ஏழைக்குழந்தைகள் ஏற்றம்பெற கிறிஸ்துமசு பெருவிழாவில் நற்செய்தியாக அன்பின் வலிமையை உணர்த்தும் பல நற்செய்திகள் சொல்லி மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தார். மவுண்ட் சரக காவல்துறை துணைஆணையர் உயர்திரு. M.S.முத்துசாமி IPS. அவர்கள்.

காவல்சிறார் மன்றத்தின் . மூலம் கிறிஸ்துமஸ் பெருவிழா ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட *மவுண்ட் சரக காவல்துறை துணை ஆணையர் உயர்திரு. M.S.முத்துசாமி,IPS பேசியதாவது.

இந்த நிகழ்ச்சிக்கு நான் கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது பார்வையாளர்கள் வேறு வந்திருந்தார்கள். அவர்களை சந்த்திதுக் கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் எனது சகோதரர் எனக்கு போன் பன்னினார் அவசரத்தைக் கருதி ஏதாவது முக்கியமான விசயமா என்றேன் இல்லை என்றார். உடனே இணைப்பை துண்டித்துவிட்டேன்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். தம்பி ஏதாவது தவறாக நினைத்திருப்பாரோ அன்னார் உயர் பதவியில் இருப்பதால் நம்மை தவிர்க்கிறாரோ என்று எண்ணி விடுவாரோ என்று என்னி வருத்தப்பட்டேன். ஆனால் நான் அப்படிப்பட்டவர் இல்லையே. இதை தம்பி புரிந்து கொண்டிருப்பாரா? என்றெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன்.
ஏன் என்றால் நான் சம்பாதிக்கும் பணம், புகழ், அதிகாரம்,சொத்து இவை எல்லாவற்றையும் விட *உலகத்தில் அன்புதான் விலைமதிக்க முடியாதது.* ஆதலால் இந்த நிகழ்ச்சி முடிந்த உடனே எனது தம்பியிடம் பேசிவிடுவேன். அது போல நீங்களும் யாரிடமும் வன்மத்தை, துரோகத்தை, பழிவாங்கும் எண்ணத்தை, மற்றவர்களிடத்தில் காண்பிக்காமல் உங்களை வெருப்பவர்களையும் ஒதுக்காமல், வெருக்காமல் அன்பு காட்டி பாருங்கள் அதன் மதிப்பு உங்களுக்கு தெரியும். மேற்க்கண்ட *பணம், புகழ், அதிகாரம், பதவி சொத்து* இவை எல்லாவற்ராலும் சாதிக்க முடியாததைகூட அன்பினால் சாதித்துக் காட்டமுடியும்.

இதற்கு ஓர் உதாரணத்தை சொல்ல கடமைப்படுகிறேன் காவல்துறையில் நான் இப்படி இருப்பதால் நிறைய பேர் என்னைப் பார்த்து இவர் எப்படி பிழைக்கப் போகிறார்….! போலிஸ் இப்படி இருக்கலாமா? என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறேன், இதற்கு காரணம் நான் மற்றவர்கள் மீது காட்டும் அன்புதான்.
*இந்த அன்புக்கு பரிசாக கடந்த காலத்தில் முதல்வராக இருந்த மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மையாருக்கு 10- ஆண்டு காலம் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்திருக்கிரேன். என்பது குறிப்பிடத்தக்கது*

எனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிகளிடம் கூட ஒரு போதும் நான் கடுமை காட்டியதில்லை. காரணம் அது எதுவாக இருந்தாலும் அந்த வேலையை அன்பாக சொல்வேன் அவர்கலும் அந்த வேலையை செய்து விடுவார்கள். ஆதலால் தான் இதுவரை எனது பணியில் எந்த குற்றம் குறையும் இல்லாமல் மனநிறைவோடு பணியாற்றி வருகிறேன். ஆதலால் நீங்களும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள் வெற்றி பெறவீர்கள். *இதற்கு மேலாவது கோவத்தையும், வன்மத்தையும், பழிவாங்கும் என்னத்தையும் தவிர்த்து விடுங்கள்* மற்றவர்களிடத்தில் அன்பு காட்டுங்கள். நீங்கள் வானலாவ உயரலாம் என்று *கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நற்செய்தியை, நம்பிக்கையை குழந்தைகள் மனதில் விதைத்தார்.*
🖲🖲🖲🖲🖲🖲🖲🖲🖲🖲🖲
*இதில் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர். திரு. ஆல்பின்ராஜ் உதவி ஆய்வாளர்கள் திரு.சுகுமார் திரு.ரவி மற்றும் அன்னை இரவுப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சமூகஆர்வலர் சு.இராமச்சந்திரன், மற்றும் டர்னிங் பாய்ண்ட் நிறுவனர் திரு. விஜயராகவன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.மொராஜிதேசாய் அருட்தந்தை திரு.புஸ்பராஜ் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சமுதாய வளர்ச்சி பணியாளர் திருமதி, சபியா மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அஜித். திரு. விக்னேஷ் மற்றும் காவல்சிறார் மன்றத்தின் மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமான பள்ளிக்கரணை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கிருஸ்துமஸ் பெருவிழாவை சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் மாணவர்கள் சிறப்பாக கல்வியின் அவசியம் குறித்து தெருவீதி நாடகம் போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *