இளையராஜாவால்  எம் எஸ்  விஸ்வநாதன் ஏமாற்றப்பட்டார்

இளையராஜாவால் எம் எஸ் விஸ்வநாதன் ஏமாற்றப்பட்டார்

ஓக்கி புயலின் போது ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட்டதோடு 108 – ஏழை பெண்களுக்கு ஆட்டுக்குட்டிகளை வழங்கி பலரின் பாராட்டை பெற்றார் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி டி செல்வகுமார்.

51 பெண்களுக்கு தையல் மிஷின் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக பி டி செல்வகுமார் வழங்கினார்.

இன்று குமரி மாவட்டம் அருமனை மத நல்லிணக்க விழாவில் கலந்து கொண்ட பி டி செல்வகுமார் அவர்கள் குளித்தலை, தக்கலை,மார்த்தாண்டம் பகுதி ஏழை பெண்கள் 51 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக 51 தையல் மிஷின்களை கிறிஸ்த்துமஸ் பரிசாக வழங்கினார் .

அப்போது பேசிய பி டி செல்வகுமார் அவர்கள் குமரி மாவட்டம் பழையாறு தண்ணீர் மணக்குடி கடல் பகுதிகளில் வீணாக கலக்கிறது. இந்த நீரை சேமித்து வைக்க தடுப்பு ஏரிகள் வைத்தால் குமரி மாவட்ட கிழக்கு பகுதி மற்றும் நெல்லை மாவட்ட தெற்கு பகுதிமக்கள், விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் . இதற்காக கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டது, மீண்டும் அடுத்த கட்டமாக ஆயிரம் விவசாயிகளுடன் கருப்பு உடை அணிந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்.

இதனையடுத்து பத்திரிகையாளர்கள் இளையராஜா மேடை பாடகர்களிடம் ராயல்ட்டி கேட்பது பற்றி கேட்ட போது……

மேடை கலைஞர்களுக்கு வேட்டு !

மேடை கலைஞர்கள் சுமார் 1 லட்சம் பேர் இந்த தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் .இந்த ராயல்ட்டியை அவர்கள் கையிலிருந்து தருவார்களா? நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் வசூலிப்பார்களா? மொத்தத்தில் அவர்கள் தொழிலுக்கு வேட்டு வைக்க பார்க்கிறார் . அடுத்த விஷயம் இந்த ராயல்ட்டினுடைய உரிமம் தயாரிப்பாளர்களுக்கே வர வேண்டும் . ஒரு காலத்தில் எம் எஸ் விஸ்வநாதன், மகாதேவன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இவர்களுடைய பாடல்களை மேடைகளில் பாடி கச்சேரி நடத்திய இளையராஜா ,கங்கை அமரன் ஆகியோர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ராயல்டி கொடுப்பார்களா? இவர்களுக்கு ஒரு நியாயம் , மற்றவர்களுக்கு ஒரு நியாயம் மொத்தத்தில் தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

ஆஸ்கர் விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்த போது கிண்டலடிக்கப்பட்டாரா ?

ஏ ஆர் ரகுமான் வளர்ச்சி பொறுக்காமல்,ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்த போது ஏ.ஆர்.ரகுமானை ஒரு பேச்சுக்கு கூட பாராட்டாமல், போட்டிக்கு ஆளில்லாததால் கிடைத்தது என்று நக்கலாக பதிலளித்தார்.

ராயல்டி போராட்டம் தொடருமா?

இந்த ராயல்டி விஷயத்தில் சட்ட அடிப்படையிலோ அல்லது தார்மீக அடிப்படையிலோ தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டியை பெற கடைசிவரை போராடுவோம். பல மூத்த தயாரிப்பாளர் முதல், இன்றைய இளம் தயாரிப்பாளர்கள் வரை இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். நாளைய தலைமுறையினருக்கும் நமது உரிமையை மீட்டு தருவோம்.

இளையராஜாவின் எக்கோ ஆடியோ,தயாரிப்பாளர்களுக்கு தர வேண்டிய ராயல்டியை பல ஆண்டுகளாக தராமல் ஏமாற்றி வருகிறார்கள். இதை நீதிமன்றம் மூலம் உரியவர்களுக்கு பெற்று தருவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *