நான்கு வயது சிறுமி ஜெயலெட்சுமி, திடீரென மாயமானாள்

சென்னை கொத்தவால் சாவடியில் தனது பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமி ஜெயலெட்சுமி, திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ரவி மற்றும் செல்வி, போலீசாரிடம் புகார் தெரிவித்ததுடன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர். அதில் சிறுமியை பெண் ஒருவர் அழைத்துசென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.*

இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் படத்தை போஸ்டராக ஒட்டியுள்ளனர். இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், போஸ்டரை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், சிறுமியையும் அந்த பெண்ணையும் அடையாளம் கண்டு விசாரித்தனர். அப்போது அந்த பெண், மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *