6 வயது மகனை கொன்ற தாய் : தீ வைத்தும் கொளுத்திய அதிர்ச்சி
6 வயது மகனை கொன்ற தாய் : தீ வைத்தும் கொளுத்திய அதிர்ச்சி சம்பவம்
குடும்ப பிரச்சினை காரணமாக மகனை பெற்ற தாயே கொலை செய்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயகாந்தன் என்ற இவர்களது 6 வயது மகன், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 27-ம் தேதி கணவனுடன் ஏற்பட்ட தகராறால், மீனாட்சி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அடிக்கடி இதுபோல் நடந்ததால், பெற்றோர் இவரை கண்டு கொள்ளாததால், அங்குள்ள தனி வீட்டில் மீனாட்சி தனது மகனுடன் தங்கியுள்ளார். அப்போது மகன் ஜெயகாந்தன் அயர்ந்து தூங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்த மீனாட்சி, வீட்டின் பின் பகுதியில் உள்ள தொட்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தி கொளுத்தியுள்ளார்.
பின்னர் மாங்காட்டில் உள்ள கோவிலுக்கு சென்று மொட்டை போட்டுக்கொண்ட மீனாட்சி, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்தாராம்.. பின்னர் அந்த முடிவை கைவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பூந்தமல்லி போலீசார் , மீனாட்சியை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்