13 ஆயிரத்து 276 கிராம பஞ்சாயத்துக்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 13 ஆயிரத்து 276 கிராம பஞ்சாயத்துக்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. தேர்தலை சுமூகமாகவும், வெளிப்படை தன்மையுடனும், அமைதியாகவும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு தொத்தம் 8 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். காலை 8 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.