ஜனவரி 2-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ஜனவரி 2-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்…. தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை ஜனவரி 2 ம் தேதி கூட உள்ளதையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க, ஜனவரி 2 ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி கூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜனவரி 2 ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *