டீ நன்றாக போடவில்லை எனக் கூறி, டீ மாஸ்டரை அடித்து கையிலிருந்த டீயை, டீ மாஸ்டர் மீது ஊற்றிய டிஎஸ்பி
டீ நன்றாக போடவில்லை எனக் கூறி, டீ மாஸ்டரை அடித்து கையிலிருந்த டீயை, டீ மாஸ்டர் மீது ஊற்றிய டிஎஸ்பி!
தூத்துக்குடி அருகே,டீ நன்றாக இல்லை எனக்கூறி, டீ மாஸ்டரை *தூத்துக்குடி புறநகர் DSP முத்தமிழ்* கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரத்தில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி அய்யங்கார் பேக்கரிக்கு வந்த *DSP முத்தமிழ்,காவலர் பொன்பாண்டி உள்ளிட்ட மூவர், லெமன் டீ போடுமாறு கூறியதை அடுத்து,அவர்களுக்கு லெமன் டீ வழங்கப்பட்டுள்ளது. அதனைக் குடித்த DSP முத்தமிழ், டீ நன்றாக போடவில்லை எனக் கூறி, டீ மாஸ்டரை கன்னத்தில் ஓங்கி அறைந்ததோடு, கையிலிருந்த டீயை, டீ மாஸ்டர் மீது ஊற்றியுள்ளார்*.
அந்த டீ மாஸ்டரை தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, வழிநெடுகிலும்,அவரை காவலர் பொன்பாண்டி கன்னத்தில் அறைந்து கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. டீ மாஸ்டரை தாக்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.