தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாபெரும் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாபெரும் தர்ணா போராட்டம்
கோவை, ஜன.2-
தமிழக அரசின் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் 35 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 2019&ல் பொங்கல் போனஸ் வழங்கிட கோரியும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 நிர்ணயிக்க கோரியும், குடும்ப ஓய்வூதியும், மருத்துவ காப்பீடு வழங்கக் கோரியும் மாநிலம் தழுவிய மாபெரும் தர்ணா போராட்டம் சிவானந்தாகாலனி, பவர்ஹவுஸ் அருகே நடைபெற்றது.
இதில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் மாவட்டத்தலைவர் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் சந்திரன் துவக்க உரையை நிகழ்த்தினார்.
ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500&ம் , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகையாக ரூ.7850&ம், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரியும், சத்துணவு ஊழியர்களுக்கு மருத்துவகாப்பீடு வழங்கவேண்டும் எனவும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களில் பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.,
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, மதன், தமிழரசி, பழனிச்சாமி, இன்னாசிமுத்து, ஆனந்தவள்ளி, சாரதா ஆகியோர் கலந்து கொண்டனர்.