இந்திய மேலாளர்கள் மற்றும் நிறுவனங்கள்’என்ற நூலை மாண்புமிகு அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் வெளியிட்டார்

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாச்சார துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. மாஃபா. கே. பாண்டியராஜன்அவர்கள், திரு. அசோக் மல்ஹோத்ரா எழுதிய “இந்திய மேலாளர்கள் மற்றும் நிறுவனங்கள்: வரங்களும் மற்றும் சுமைகளும்” (Indian Managers and Organisations: Boons and Burdens) என்ற நூலை இன்று வெளியிட்டார். மாஃபா ஸ்டேட்டர்ஜிக் கன்சல்டன்ட்ஸ் மற்றும் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் ஆகிய இரு அமைப்புகளும் இந்நிகழ்வை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வின்போது மாண்புமிகு அமைச்சர் திரு. கே. பாண்டியராஜன்,ரானே குழுமத்தின் கௌரவ தலைவர் திரு. எல். லட்சுமணன்,சன்மார்க் ஷிப்பிங் லிமிடெட் – ன் துணை நிர்வாக இயக்குனர் திரு. சி.வி. சுப்பாராவ் ஆகியோர் அடங்கிய பிரபல நிபுணர்கள் பங்கேற்ற ஒரு குழு கலந்துரையாடலும் இடம்பெற்றது.

“இந்திய மேலாளர்கள் மற்றும் நிறுவனங்கள்” என்ற இந்த நூல், ஒரு பன்முகத்தன்மை கொண்ட அடிப்படை அம்சமாக அல்லாத கட்டமைப்பான , தி எக்ஸிஸ்டென்ஷியல் யுனிவர்ஸ் மேப்பர் (EUM) என்ற கருத்தாக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. தனிநபர்களின் மற்றும் நிறுவனத்தின் அடையாளத்தை மேப்பிங் செய்வதற்கான புதிய உளஅளவியல் கருவிகளை இக்கட்டமைப்பு உள்ளடக்கும். எந்த ஒரு நிகழ்வையும் உறைய வைக்கப்பட்ட வகையினங்களுக்குள் வைப்பதை இது தவிர்க்கிறது: அவைகளின் இடைநிலை பரஸ்பர உறவு மற்றும் போக்குகளை அடையாளம் காண்பதற்கான புரிதல் ஏற்படுவதை இது ஏதுவாக்குகிறது. நவீனத்துவத்துடன் இந்தியாவின் இருமனதான, குழப்பான உறவு இப்புத்தகத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. இதன் விளைவாக ஆங்கிலோ-சாக்ஸன் பாரம்பரியத்தின் அடிப்படையில் பெரும்பாலும் அமைந்திருக்கிற கார்ப்பரேட் உலகின் கட்டாய அம்சங்களை ஏற்றுக்கொள்வதை இந்திய மேலாளர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்கள் இதில் சுட்டிக்காட்டப்படுகின்றன. குழப்பமான, இருமனதான இந்த மனநிலையானது ஒரு பிரச்சனையில்லை என்று வாதத்தை முன்வைக்கின்ற இந்த நூல், படைப்பூக்க சாத்தியத்திறனுடன் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இது இருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

மாணவர்கள், நிர்வாக பொறுப்பு வகிக்கும் உயரதிகாரிகள் மற்றும் இத்துறையின் நிபுணர்கள் அடங்கிய இக்கூட்டத்தில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் மா.ஃபோ கே. பாண்டியராஜன்,இந்நூலின் ஆசிரியரான திரு. அசோக் அவர்களை தனது வழிகாட்டி என்று குறிப்பிட்டு பாராட்டினார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில்கூறியதாவது: “மனிதவள மேலாண்மைத் துறையில் இந்த நூலானது ஒரு சிறப்பான மேற்கோள் ஆதாரமாக இருக்கும். மனிதவளத்துறை மற்றும் நிறுவன முன்னேற்ற தொழில்பிரிவு 50 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டிருக்கும் இந்த நூலாசிரியரின் இப்புத்தகம், தன்னையும் மற்றும் நிறுவனங்களையும் விவரணை செய்வது மீது புதிய கண்ணோட்டங்களை முன்வைக்கிறது. இந்திய தன்மையோடு தன்னையும் மற்றும் நிறுவனத்தையும் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறையை தெளிவாக எடுத்துக்கூற இப்புத்தகம் முயற்சிக்கிறது. தற்போதுள்ள கார்ப்பரேட் செயல்முறைகளோடு இவைகளை எப்படி ஒருங்கிணைத்துக்கொள்ளலாம் என்று இந்த நூல் எடுத்துக் கூறுகிறது. பாரம்பரியமாகவே, இந்திய மேலாளர்கள், இந்திய கலாச்சார பின்னணியின் அடிப்படையில் பயிற்சியளிக்கப்பட்டவர்களாக வெளிவருகின்றனர் மற்றும் அதன்பிறகு மேற்கத்திய சிந்தனைகளை அவர்களுக்குள் புகுத்துகிற ஒரு கார்ப்பரேட் உலகிற்குள் அவர்கள் நுழைகின்றனர்,”என்றார்.

அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்படுமானால் மிகச்சிறப்பாக இருக்கும் என்று மாண்புமிகு அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். இதைத் தொடங்கும் வகையில், இப்புத்தகத்தை தமிழ் மக்கள் அனைவரும் வாசித்துப் பயனடைவதற்காக தமிழ் மொழியில் இதனை மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகளை தான் எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தனது நூலை அறிமுகம் செய்து அது குறித்து சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கிய இந்நூலாசிரியர் திரு. அசோக் மல்ஹோத்ரா, இந்திய மக்கள் மிகப்பெரிய செயல்திறனை இன்னும் கூர்தீட்டி மேம்படுத்துவதற்கு நமக்கு அந்நியமான கட்டமைப்புகளின் வழியாக விஷயங்களைப் பார்ப்பதற்கு பதிலாக, இந்திய கண்ணோட்டத்தின் அடிப்படையில் அவைகளை அணுகுவது முக்கியமாகும் என்று கூறினார். “மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் மீதான நமது கருத்தமைவுகளை மறுபரிசீலனை செய்வதை இது அவசியமாக்கும் மற்றும் இந்திய கண்ணோட்டத்தின் கட்டாய அம்சங்களை நிறுவன ரீதியிலான செயல்முறைகளும் கருத்தில் கொள்வதை உறுதி செய்வதும் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் முக்கியமானதாக இதைக் கருதக்கூடாது என்று வலியுறுத்திய அவர், இது இன்னும் மிகப்பரவலான விளைவுகளை கொண்டிருப்பதாக கூறினார். இந்த அர்த்தத்தில் இந்திய கண்ணோட்டம் என்பது, கடந்த காலத்தின் ஒரு அடையாளச் சின்னமாக மட்டும் இருப்பதில்லை:மாறாக, தற்போதைய காலத்திற்கும் மற்றும் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய சம்பந்தத்தைக் கொண்டிருக்கிறது என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

இந்த நூலானது, மேலாண்மை, மனிதவளம், தலைமைத்துவம் / ஆளுகை / நிர்வாகம், மனநலவியல், சமூகவியல், கல்வி, பல்வேறு கலாச்சாரங்கள் மீதான ஆய்வுகள் ஆகிய துறைகளில் இயங்குகின்ற நபர்களுக்கு ஆர்வமூட்டுவதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

இந்த நூல் குறித்து கருத்து தெரிவித்த திரு. லட்சுமணன், EUM கட்டமைப்பு மீதான அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்ற கண்ணோட்டங்களுள் பல, அவரது சொந்த தனிப்பட்ட அனுபவத்திலும் பிரதிபலித்தன என்று அவர் குறிப்பிட்டார். இக்கட்டமைப்பானது, தனிப்பட்ட அளவிலும் மற்றும் நிறுவன அளவிலும் மிக பொருத்தமானதாக இருப்பதாக தான் கண்டறிந்தேன் என்று தனது எண்ணங்களை திரு. சுப்பாராவ் பகிர்ந்துகொண்டார்.

இந்நூலாசிரியரான திரு. அசோக் மல்ஹோத்ரா, நிறுவன மேம்பாடு, மனிதவள மேலாண்மை பிரிவில் ஒரு சிறப்பு நிபுணராவார். பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் மற்றும் IIMs, LBSA, ASCI போன்ற முன்னணி நிர்வாகவியல் கல்வி நிறுவனங்களிலும் நிபுணத்துவ ஆலோசகராக இவர் பணியாற்றி வருகிறார்.

சுய சீர்தூக்கல் மற்றும் கலந்துரையாடல் வழியாக மக்களின் வாழ்க்கையை இன்னும் சிறப்பாக மாற்றுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் சுமேதாஸ் அகாடமியின் நிறுவனர்களுள் திரு. மல்ஹோத்ரா அவர்களும் ஒருவர். தனிநபர் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான இந்திய சங்கத்தின் (ISISD)என்பதன் மேனாள் தலைவராகவும் இருக்கும் இவர், மாஃபா மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் லிமிடெட் என்ற மேனாள் நிறுவனத்தின் தலைவராகவும் திறம்பட செயலாற்றியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *