பத்திரிகையாளர்களை தாக்கி இடது கை உடைந்தது, காவல்துறையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில்.ஆர்ப்பாட்டம், 15-2-2019 காலை 11-மணிக்கு
பத்திரிகையாளர்களை தாக்கிய காவல்துறை
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவியை படம் பிடிப்பதற்காக கேமராமேன்கள் காத்திருந்தனர். விசாரணை முடிந்து நிர்மலாதேவி வெளியே வந்து வாகனத்தில் ஏறும்போது செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்களை அடித்து நாலாபுறமும் சிதறி ஓடவைத்த போலீசார். நீதிமன்ற வளாகம் போர்க்களமானது…..
போலீஸாரின் அராஜக தாக்குதலில் நக்கீரன் நிருபர் சி.என்.ராமகிருஷ்ணனுக்கு கை முறிந்தது. கை கடிகாரம் உடைந்தது. சன் டிவி செய்தியாளர் மணிகண்டனுக்கு கை எலும்பு மூட்டு இறங்கிவிட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகைப்படக்காரர்களின் கேமரா உடைந்தது.