குளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வணிக நோக்கத்தில் மணல் கொள்ளை நடைபெற்றால், சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்த ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வட்டார விவசாயிகள், பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்,
விவசாயத்திற்கு என்ற பெயரில் குலசேகரநல்லூர் குயவன்குளம் கண்மாயில் வணிக நோக்கத்தில் மண் எடுக்கப்படுகிறது.
புதுநகர், சங்கரராஜபுரம், புதியம்புத்தூர் மலர்குளம், செவல்குளம் பகுதி குளங்களுக்கு மழைநீர் செல்ல முடியாத அளவுக்கு, ஒரே இடத்தில் விதிமுறைகள் மீறி மண் எடுத்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்து புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவின் பேரில் ஒட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்து,
குயவன்குளம் கண்மாயில் மண் எடுக்க தடை விதித்தார்.
ஆனாலும் ஒரு சில வருவாய் துறை, கனிமவளத் துறை, காவல்துறை அலுவலர்களின் கூட்டணியால்,
குளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து வணிக நோக்கத்தில் மணல் கொள்ளை நடைபெற்றால், சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்த ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வட்டார விவசாயிகள், பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர்.