பூங்காவிற்கான குழந்தைகள் தூதுவர் பயிற்சி முகாம்
சென்னை தாம்பரம் அருகே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்,
பூங்காவிற்கான குழந்தைகள் தூதுவர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ், பூங்கா தூதுவர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
பயிற்சி பெற்ற மாணவர்கள் அடுத்த ஓராண்டிற்கு பூங்கா தூதுவர்களாக செயல்பட்டு, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் சிறப்பு பற்றியும், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் தங்கள் பள்ளிகளிலும், தங்களுடைய குடியிருப்பு பகுதிகளிலும் பரப்புரை செய்வார்கள்.
தூதுவர்களாக பயிற்சி பெற்றவர்கள் வண்டலூர் பூங்காவிற்கு பத்து முறை நுழைவுச் சீட்டு இல்லாமல் வந்து செல்ல அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மத்தியில் உயிரினங்கள் மீதான நேசிப்பை அதிகரிக்கும் வகையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
குளிர்காலப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.
கோடைகாலப் பயிற்சியும் பூங்கா பள்ளியின் சார்பில் நடக்கிறது.
இதற்கான முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை தமிழக அரசின் வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்கா இணையத்தளத்தின் (www.aazp.in) மூலம் அறிந்து கொள்ளலாம்.