சே.கு. தமிழரசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்திய குடியரசு கட்சியின் தலைவர் திரு சே.கு. தமிழரசன் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை சந்தித்துப் பேசினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவருமான திரு சே.கு. தமிழரசன் அவர்கள், அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு மு தங்கராஜ் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயளாளர் திரு N சம்பத் அவர்களோடு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை இன்று (18.03.2019) சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் R மகேந்திரன் அவர்களும் உடனிருந்தார்.