போலி வேட்பாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெய்ஹிந்த் சுதந்திர கட்சி தேசிய தலைவர் பேட்டி
போலி வேட்பாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜெய்ஹிந்த் சுதந்திர கட்சி தேசிய தலைவர் பேட்டி
கோவை, மார்ச்.18-
போலி வேட்பாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய்ஹிந்த் சுதந்திர கட்சி தேசிய தலைவர் ராகுல்காந்தி கோவை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அதே போல சிறு கட்சிகள் என்ற பெயரில் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வேட்பாளர் தேர்வின் பிறகு தங்கள் ஆதரவினை பெரிய அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்து விட்டு பிரசாரம் செய்வதில்லை. இதற்கு காரணம் பூத் ஏஜென்டுகள் அதிக அளவில் நியமித்து தேர்தல் வாக்களிக்கும் நாளிலும் மற்றும் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நாட்களிலும் பயன்படுத்தி நேர்மையற்ற தேர்தலை நடத்தவே இந்த தேர்தல் யுக்தியை பயன்படுத்துகின்றனர். இந்த வேட்பாளர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, நான் இரண்டு தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு உள்ளேன். நான் மற்றும் என்னை போன்ற சுயேச்சை வேட்பாளர்கள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் பெறும் வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை நிருபர் ராஜ்குமார்