துறு துறு தெனாலி ராமன்

சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…!!!

“பரதம் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ்” ஸுடன்  ராயல் சக்தி சாரிடபிள் டிரஸ்ட்,இந்திரா ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இன்டெர்வியூ டெஸ்க் ஆகிய நிறுவங்கள்  இணைந்து  சென்னை டி .நகர் வாணி மஹாலில் புதன்கிழமை (17-04-2019)அன்று  “துறு துறு தெனாலி ராமன்”  என்ற இசை நடன நாட்டிய நகைச்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் திரு S.P.முத்துராமன்,நடிகர் ஆரி,இயக்குனர் குழந்தைவேலப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தற்போதைய பிள்ளைகள் பழங்கால  நீதிக்கதைகளை கேட்டு வளரும் சூழ்நிலையில் இல்லாமல் விஞ்ஞான வளர்ச்சியால் அலைபேசியில் வீடியோ விளையாட்டுகள் மட்டுமே விளையாடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

நம் முன்னோர்கள்   நீதிக்கதைகளாக கூறிய அறநெறிகளை தற்கால பிள்ளைகள் மனதில் பதியவைக்கும் ஒரு புதிய முயற்சியுடன் இந்த நகைச்சுவை நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது.Smt.ஹிமஜா குழுவினர் இந்த நாட்டிய நிகழ்ச்சியை சிறப்புற அரங்கேற்றினர்.திரு.R.R.அதுல்குமார் நேரலை இசையமைப்பு சிறப்பாக இருந்தது.

இந்நாட்டிய நிகழ்ச்சியில் தெனாலிராமனாக குமாரி  P.L.ரமாவும்,கிருஷ்ணதேவராயராக  Smt.ஹிமஜாவும் பங்கேற்றனர்.குறிப்பாக குமாரி  P.L.ரமாவின் முகபாவங்களும்,நாட்டிய அசைவுகளும் புதுமையாகவும்,சிறப்பாகவும் இருந்தது.

நாடகத்தின் முடிவில் சிறப்பு விருந்தினர்களுக்கு  நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் பேசிய இயக்குனர் S.P.முத்துராமன் நாட்டிய குழுவினரை வாழ்த்தினார்.குறிப்பாக இசையமைப்பாளர் திரு.R.R.அதுல்குமார் அவர்களின் சிறப்பான நேரலை இசையை வெகுவாக பாராட்டிய அவர் அதுல்குமார் திரைத்துறையில் பெரிய அளவில் சாதிக்க தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அனைவரையும் வாழ்த்தி பேசிய நடிகர் திரு.ஆரி தற்கால குழந்தை வளர்ப்பு பற்றி பேசியபோது ஒரு திருடனோ,கொலைகாரனோ சமூகத்தில் பெரிய குற்றவாளியில்லை எனவும்  சரியான முறையில் பிள்ளைகளை  வளர்க்க தெரியாத பெற்றோர்களே முக்கியமான குற்றவாளிகள் எனவும்  குறிப்பிட்டது அனைவரையும் யோசிக்க வைத்தது.

விழாவில் பேசிய இயக்குனர் குழந்தைவேலப்பன் தனது மகன் நாடகத்தை ரசித்து பார்த்தத்தையே மேற்கோள் காட்டி நாடகத்தின் சிறப்பை விளக்கினார்.

நாட்டிய நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *