2019ம் ஆண்டிற்கான பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கில் சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணையும் ப்ரயாக் நிறுவனம்

முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க்கும் 2019ம் ஆண்டிற்கான பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க்கும் சென்னை ஸ்வாகர்ஸ் அணிக்கு புகழ்பெற்ற பாலிவுட் நடிகை சன்னி லியோன் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் குளியலறை சாதனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகிய ப்ரயாக், சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைந்துள்ளது. இளைஞர்களிடம் பெருமளவு ஆதரவு பெற்றுள்ள சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவதால், ப்ரயாக் நிறுவனம் சிறந்த வணிக வளர்ச்சியை எதிர் நோக்கியுள்ளது.

இந்திய தொலைக்காட்சி துறையினரை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கின் 4வது சீசனில் 6 நட்சத்திர அணிகள் பங்கேற்க்கிறது. முன்னணி பாலிவுட் நடிகை சன்னி லியோன் உரிமையாளராக உள்ள சென்னை ஸ்வாகர்ஸ் அணியில் இந்தியாவின் புகழ் பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்களாகிய ஹிமான்சு மல்ஹோத்ரா, பரஸ் ஆரோரா, ஷோபித் அத்ரெ, அபிஷேக் வர்மா, தான்யா ஷர்மா, மான்சி ஷர்மா, பூஜா பேனர்ஜி, விஷால் சிங், மொஹித் மல்ஹோத்ரா, கபில் ஆர்யா, தில்ஷான் வாடியா, அக்ஸர்கன் பத்தான் மற்றும் ஈஷானி ஷர்மா ஆகியோர் பங்கேற்க்கிறார்கள்.

சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு நிதின் அகர்வால் கூறுகையில், பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக் இந்திய இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த லீக்கின் மிக முக்கிய அணியான சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் நாங்கள் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திறமை வாய்ந்த இளம் வீரர்களை உடைய சென்னை ஸ்வாகர்ஸ் அணியுடன் இணைவதன் மூலம் எங்கள் நிறுவனம் இந்திய இளைஞர்களுடன் எளிதாக இணைய முடியும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இந்த ஆண்டு நடைபெறும் பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக்கில் 200க்கும் அதிகமான புகழ் பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர். பாக்ஸ்ப் கிரிக்கெட் லீக், கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் அதே வேளையில், பிரயாக் நிறுவனம் நாட்டின் விளையாட்டு மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் ஆர்வமாக உள்ளது. மேலும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ப்ரயாக் நிறுவனம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு துறையை ஊக்குவிப்பதில் பேரார்வத்துடன் செயல்பட்டு வரும் ப்ரயாக் நிறுவனம், இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு இடையே அயர்லாந்தில் நடைபெற்ற டி20 ஆட்டம், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற நீதாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், ஹாராரேவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கான டி20 போட்டிகளுக்கும் மற்றும் ப்ரோ கபாடி விளையாட்டில் டெல்லி அணியுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *