ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் வைத்தார்
சென்னை மே-09
மருத்துவர்கள் தாமாகவே முன்வந்து ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் வைத்தார் மேலும்
இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு பிரிவு வரும் காலங்களில் நாட்டில் முதலிடம் பெற வாழ்த்துவதாக தன் உரையில் தெரிவித்தார்…
சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக செஞ்சிலுவை (ரெட் கிராஸ்) தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்று, அங்கு வைக்கப்பட்டுள்ள செஞ்சிலுவை சங்க நிறுவனர் ஜீன் ஹென்றி ஜுனந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செஞ்சிலுவை சங்க கொடியையும் ஏற்றினார். செஞ்சிலுவை சங்கம் சார்பாக வைக்கப்பட்டிருந்த சிறப்பு இலவச மருத்துவ முகாம்களை திறந்து வைத்து முகாம்களை பார்வையிட்டார்(ENT, Dermatology,dental,height weight check up). பின்பு ஏழை எளிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரம்,செயற்கை கை மற்றும் கால்கள், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்டங்களை 50க்கும் மேற்பட்டோருக்கு ஆளுநர் வழங்கினார். இந்த நிகழ்வில் செஞ்சிலுவை சங்க தமிழக தலைவர் ஹரீஷ் மேத்தா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்…
தொடர்ந்து பேசிய ஆளுநர், 1920 யில் ஜெனிவாவில் தொடங்கிய செஞ்சிலுவை அமைப்பு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செஞ்சிலுவை சங்கம் பல மனிதநேயம் மிக்க செயகள் செய்து வருகிறது. இலவச இரத்த முகாம்,எலை மக்களுக்கு நுரையீரல் ,இதய அறுவை சிகிச்சை முதலியவை இந்த அமைப்பு மூலமாக செய்யப்பட்டு வருகிறது எனவும்,
இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு பிரிவு வரும் காலங்களில் நாட்டில் முதலிடம் பெற வாழ்த்துவதாகவும்,
மருத்துவர்கள் தாமாகவே முன்வந்து ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்…