ஸ்ரீ செங்கேணியம்மன் ஆலயத்தின் 48 வது ஆண்டு சித்திரை திருவிழா
சென்னை மே-10
அருள்மிகு ஸ்ரீ செங்கேணியம்மன் ஆலயத்தின் 48 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா நுங்கம்பாக்கம் புஷ்பா நாகரிலுள்ள ஆலய வளாகத்தில் நடைபெற்றது…
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது…
முன்னதாக நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையிலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த
நிகழ்வில் அம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருந்து 300ற்கும் மேற்பட்ட பெண்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வீதி வீதியாக பால்குடம் எடுத்து சென்று செங்கேணியம்மனுக்கு தங்களின் நேர்த்திகடனை நிறைவேற்றினர்…
மேலும் இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்…