எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு
காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு), ஆகியவை இணைந்து 2019 மே மாதம் 17 ஆம் தேதி மற்றும் 18 ஆம் தேதியில் கூட்டம் ஒன்றை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மைய நூலகக் கட்டிடத்தில் 15 ஆவது தளத்தில் ஸ்ரீ வெங்கடராமன் ராமகிருஷ்ணன் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) மற்றும் ஸ்மார்ட் கேம்பஸ் கிளவுட் நெட்வொர்க் தொடர்பாக மே 17 ஆம் தேதி எஸ்.ஆர்.எம். இன் உயர்மட்டக்குழு கூடி விவாதித்தது. மே 18 ஆம் தேதி நடந்த வட்ட மேசை விவாதத்தில் எஸ்.டி.ஜி.யின் கல்வித்திட்டத்தை ஸ்மார்ட் கேம்பஸ் கிளவுட் நெட்வொர்க் (SCCN) மூலம் எவ்வாறு முன்னிலைப்படுத்துதல் என்பதன் தொடர்பாக கூடி விவாதிக்கப்பட்டது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் எஸ்.டி.ஜி. இன் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்கான சிறந்த ஆலோசனைகளையும் முதன்மையான குறிப்புகளையும் யூ.ஜி.சியின் துணைத்தலைவர் பேராசிரியர் பூஷன் பட்வர்தன் மற்றும் பேராசிரியர் M.P.பூனியா (துணைத் தலைவர், AICTE) ஆகியோர் வழங்கினர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர், துணை வேந்தர் டாக்டர் சந்தீப் சன்செட்டி, பதிவாளர் டாக்டர் நா.சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். எஸ்.டி.ஜி. இன் கல்வித்திட்டத்தைப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து செய்வது குறித்துப் பிராந்திய அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் திரு எம்.சுந்தரேசன் பேசினார்.
நிலையான வளர்ச்சி 2030 என்ற அறிக்கையில் ‘எவரொருவரும் பின்தங்கவில்லை’ என்ற கூற்றை முன்னிறுத்தி 2015இல் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பினர்களாலும் முடிவெடுக்கப்பட்டது. எஸ்,டி.ஜி.யின் 17 இலக்குகளை 2030க்குள் அடையவும் இப் புவியில் உலகமக்களின் அமைதி மற்றும் வளத்தை எதிர்நோக்கிய செயல் திட்டத்தையும் அதற்கான உலக கூட்டாண்மை அழைப்பை இவ்வறிக்கை விடுக்கிறத.
அவசரநிலையைப் புரிந்துகொள்வதற்கு, டெரெ பாலிசி மையம் ஸ்மார்ட் கேம்பஸ் கிளவுட் நெட்வொர்க் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது யு.என் எஸ்.டி.ஜிக்களுக்கு ஒரு உறுதியான பங்களிப்பை வழங்குவதற்காகப் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி வளாகங்களில் உலகளாவிய வலையமைப்பை உருவாக்குகிறது. யுனெஸ்கோ, யூ.ஜி.சி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை ஸ்மார்ட் கேம்பஸ் கிளவுட் நெட்வொர்க்கிற்கு மிகவும் ஆதரவாக உள்ளன.
இந்த வட்டமேசை விவாத அரங்கில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், சிறந்த வல்லுநர்கள், புலத்தலைவர்கள், பல்கலைக்கழக உயர்மட்டக்குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர். அனைத்துக் குழு உறுப்பினர்களும் இணைந்து எஸ்.டி.ஜி.யின் இலக்கு வளர்ச்சி பற்றி விவாதித்ததோடு எஸ்.டி.ஜி.யின் இலக்குகளை இந்தியா முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கினர். வருங்காலத்தில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் SCCN திட்டங்களை வகுக்கவும் தென்னிந்தியாவின் SCCN மையமாக எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.