SRMIST 5 நாட்கள் தொடர் ஹாக்த்தான் போட்டி நமீபியா நாட்டின் தூதர் கேபிரியல் பி.சினிம்போ இன்று தொடங்கி வைத்தார்
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ( SRMIST ) 5 நாட்கள் தொடர் ஹாக்த்தான் போட்டி நமீபியா நாட்டின் தூதர் கேபிரியல் பி.சினிம்போ இன்று தொடங்கி வைத்தார்
தொழில் நிறுவனங்களுக்கு தேவைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகளின் தீர்வு காண்பதற்கான புதிய கண்டுபிடிப்பு போட்டியான ஹாக்த்தான் (Hackathon) எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதனை இன்று காலை இந்தியாவிற்கான நமீபியா நாட்டின் தூதர் (High Commissioner) கேபிரியால் பி.சினிம்போ (Gabriel P.Sinimbo ) குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பொறியியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் கல்வி பயில நமீபியா நாட்டு மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறினார்.
நாட்டில் புதிய உற்பத்திக்கு வழிகாணும் வகையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட் அப் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி இந்த்திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்புக்களின் உற்பத்திக்கு வங்கிகள் நிதி உதவி வழங்கும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொழில் நிறுவனங்களில் புதிய உற்பத்தி மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கான ஹாக்த்தான் போட்டியை நடத்தி வருகிறது. இந்தாண்டு 84 தொழில் நிறுவனங்கள் தங்களின் தீர்வுக்கான கோரிக்கையை அளித்துள்ளன. அதன்படி நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களின் வன்பொருள் தீர்வுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கு போட்டி நடத்தப்பட்டது. இதன் நிறைவு போட்டி தமிழ்நாட்டில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்,வேல்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி உள்ளிட்ட 4 இடங்களில் நடத்தப்படுகிறது.
மிடுக்கான இந்தியா ஹாக்த்தான் (Smart India Hackathon) என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SRMIST -SRM Institute of Science and Technology) முதல் தடவையாக வன்பொருள் தீர்வுக்காக நடைபெறும் இந்நிகழ்வு இன்று (8.7.19) காலை 9மணிக்கு தொடங்கியது 12ந்தேதி (12.7.19) மாலை 5.30மணி வரை 100மணிநேரம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த ஹாக்த்தான் போட்டியில் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களை சேர்ந்த தலா 4மாணவர் உட்பட 6 பேர் கொண்ட குழுவாக 10 குழுக்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அப்பலோ ஆஸ்பிட்டல் லிமிடெட், அரபிந்தோ பார்மா ,டாடா ஸ்டீல்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர்ஸ் ஆகிய 4 தொழில் நிறுவனங்களுக்கு தேவையான தீர்வுகளை கண்டுபிடிப்பார்கள். இதனை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பிரதிநிதிகள் தொழில் நிறுவனங்களின் மேற்பார்வையிட்டு சிறந்த தீர்வுகளை தேர்தெடுப்பர்.
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கண்டுபிடிப்பு மற்றும் காப்பக மையம் (SRM Innovation and Incubation Center) சார்பில் எஸ்ஆர்எம் வளாகத்தில் உள்ள பேப்ரிகேசன் ஆய்வகத்தில் இந்த வன் பொருள் ஹாக்த்தான் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை ஹாக்த்தான் நிகழ்வின் ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் ஆர்.அனந்தகுமார் வரவேற்றார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி தலைமை வகித்து பேசினார்.
நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான நமீபியா நாட்டின் தூதர் கேபிரியால் பி. சினிம்போ சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஹாக்த்தான் போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது
ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வி தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. புதிய உற்பத்திக்கு தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்புக்கள் தேவை அதோடு தொழில் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண புதியகண்டு படிப்புக்கள் அவசியம் . எனவே அந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக இங்கு நடைபெறும் ஹாக்த்தான் நிகழ்வினை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எங்கள் நமீபியா நாடு இந்திய நாட்டுடன் நீண்ட காலமாக நல்லுறவு கொண்டுள்ளது.தகவல் தொழில்நுட்பத்திலும் மருத்துவ துறையிலும் இந்திய நாடு மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. எங்கள் நாட்டு மாணவர்கள் சுமார் 100 பேர் இந்திய நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வந்துள்ளனர். எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியமளித்து உலக தரத்திலான உயர் கல்வி அளித்து வருகிறது. அதே போன்று எஸ்ஆர்எம் மருத்துவகல்லூரி மருத்துவமனை நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கி வருவதை நேரில் கண்டேன். எங்கள் நாட்டிலிருந்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி பயில மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அத்துடன் எங்கள் நாட்டிலுள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைக்காக அனுப்பி வைக்கபடுவார்கள் என்றார்.
ஹாக்த்தான் போட்டியில் பங்கேற்றுள்ள மாணவர் குழுவினரின் ஆராய்ச்சி பணிகளை பார்வையிட்ட நமீபியா ஹைகமிஷ்னர் கேபிரியல் பி. சினிம்போ அவர்களது ஆராச்சி பணிகளைப்பற்றி கேட்டறிநதார்.
பின்னர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு சென்ற நமீபியா ஹை கமிஷ்னர் மருத்துவனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் உயர் சிகிச்சை முறைளை பற்றி கேட்டறிந்தார்.அங்கு எஸ்ஆர்எம் அறிவியல்தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி. சத்தியநாராயணன் மருத்துவமனை டீன் டாக்டர் ஏ. சுந்தரம் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் டி.சாமிநாதன் சந்தித்து மருத்துவ சிகிச்சை முறைகளை பற்றி கேட்டறிந்தார்.