காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்ததை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைப்பெற்றது .
இக்கண்டன ஆர்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுலைமான் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான், மாநிலச் செயலாளர்கள் ஐ. அன்சாரி, எஸ்.முகம்மது யாஸீர், வட சென்னை மாவட்ட மாவட்ட தலைவர் சாகுல், தென் சென்னை மாவட்டத் தலைவர் ஹபீபுல்லா , காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன், காஞ்சி கிழக்கு மாவட்டத் தலைவர் அமானுல்லாஹ் திருவள்ளுர் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது இப்ராஹீம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மாலிக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள் ,பெண்கள், சிறுவர்கள் பெருந்திரளாக இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.