உலக தாய்ப்பால் வார விழா
வேலைக்கு செல்லும் பெண்கள் நிச்சயமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று பின்னணி பாடகி பூஜா வைத்தியநாதன் வேண்டுகோள் .
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா கடைபிடிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது குறித்து சிறப்பு விளக்கப் படங்களும் அதன் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் பெற்றோர்களுக்கு புகைப்பட கண்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் சிங்கர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகி பூஜா வைத்தியநாதன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியமானது ஆரோக்கியமானது என்றும் ,வேலைக்குச் செல்லும் தாய் மார்கள் பணி சுமை நிமித்தம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது அல்ல என்றும் தெரிவித்தார்
தாய்பால் கொடுப்பதனால் அழகு குறையும் என்பது வீண் வதந்தி என்றும் மேலும் பெண்களுக்கு தாய்பால் கொடுப்பதனால் அழகு மெருகேறும் என்றும் அவர் கூறினார்.
Amtv.asia V.#BALAMURUGAN 9381811222
amtveditor@gmail.com