சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக புதிய ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா
சென்னை ஆகல்ட் 12
மருத்துவ துறையில் சென்னை மிகவும் முக்கியமான பங்கினை வகிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர்.செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார் மேலும் சுகாதார துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என பாராட்டு…
சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பாக புதிய ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா நுங்கம்பாக்கத்திலுள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது…
இந்த புதிய ஆராய்ச்சி ஆய்வகத்தை உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர்.செளமியா சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு துவக்கி வைத்தார்…
இந்த நிகழ்வில் பன்னாட்டு மருத்துவர்கள் மற்றும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவ மனையின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செளமியா சுவாமிநாதன் அவர்கள்…
கேமிங் மற்றும் டிஜிட்டல் மீடியாவினால் இன்றைய இளம் வயது குழந்தைகள் மிகவும் பாதிப்பு குள்ளாகி உள்ளதாகவும், இந்த மாதிரி டிஜிட்டல் மீடியாவின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுகென இந்தியாவில் பல்வேறு மருத்துவமனைகளில் புதிய மருத்துவ சிறப்பு பிரிவுகள் தொடங்கியுள்ளதாகவும்,
குழந்தைகள் நலன் மற்றும் பேறுகால மருத்துவத்தில் சென்னை மிகவும் முன்னேறிய நகராக திகழ்கிறது எனவும்,
தமிழக அரசு சுகாதார துறையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் மிக சிறந்த மாநிலமாக திகழ்கிறது எனவும்
புதிதாக இன்று துவங்கியுள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் ஆராய்ச்சி ஆய்வகம் பொதுமக்களுக்கு பயனுடையதாக அமையும் என தெரிவித்தார்…