70 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் ஓவியம் வரைந்து உலக சாதனை முயற்சி.
73 ஆவது சுதந்திர தினத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் ஓவியம் வரைந்து உலக சாதனை முயற்சி.
சென்னை கோபாலபுரம் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற உலக சாதனை ஓவியம் வரைதல்நிகழ்ச்சி திருநங்கைகள் அமைப்புகள் சார்பாக நடைப்பெற்றது.
இந்த ஓவியம் 100க்கும் மேற்பட்ட திருநங்கை கலந்து கொண்டு 70 ஆயிரம் சதுர அடியில் அண்ணல் அம்பேத்கரின் உருவ ஒவியம் வரைந்து உலக சாதனை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டு ஓவிய உலக சாதனை நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.. மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டார்.